யாழில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Jaffna University of Jaffna SL Protest
By Thulsi Jan 20, 2025 01:38 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (20.1.2025) காலை 10.30 மணியளவில் யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றலில் இடம்பெற்றுள்ளது.

இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ். நகரினூடாக ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் : டக்ளஸ் சந்தேகம்

யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் : டக்ளஸ் சந்தேகம்

வேலைவாய்ப்பு வெற்றிடம் 

இதன்பொழுது கருத்து தெரிவித்த வட மாகாண பட்டதாரிகள் சங்க தலைவர், “இன்று பல்வேறுபட்ட திணைக்களங்களில் வட மாகாணத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது.

யாழில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் | Unemployed Graduates Protest In Jaffna

அந்த வேலைவாய்ப்புக்கள் எமது பட்டதாரிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதேவேளை இன்று இந்த கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம். எமக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை கொண்டிருக்ககூடிய அரசினதே ஆகும்.

எம்மால் கடந்த முறை சுத்திகரிப்பு தொழிலாளர் வேடமிட்டு போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பில் பலர் சமூக ஊடகங்களில் எமக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தனர். எமக்குள்ளும் பல கூலி தொழிலாளிகள் இன்று காணப்படுகின்றனர்.

எமது பெற்றோர்களும் பல கூலி தொழில்களை முன்னெடுத்து வியர்வை சிந்தியே இந்த இடத்திற்கு எம்மை கொண்டு வந்தார்கள். கூலி தொழில் சுத்திகரிப்பு தொழில் நகைப்புக்குரிய தொழில் அல்ல. இலங்கை அரச கட்டமைப்பின் பட்டபடிப்பு மூலம் நாம் பெற்றது என்ன அரிசிற்கு அழுத்தம் கொடுக்கவே நாம் இவ்வாறாக ஈடுபட்டோம்.

யாழில் சர்ச்சையை கிளப்பிய கலாசார மத்திய நிலைய பெயர்ப் பலகை! கடற்றொழில் அமைச்சர் விசனம்

யாழில் சர்ச்சையை கிளப்பிய கலாசார மத்திய நிலைய பெயர்ப் பலகை! கடற்றொழில் அமைச்சர் விசனம்

முற்றுகையிட்டு கோரிக்கை கடிதம்

இது தொடர்பில் அன்றைய போராட்டத்தின் பொழுதே முழுதெளிவினையும் வழங்கியிருந்தோம். இன்றைய தினமும் எமது அறவழிப்போராட்டம் வீதியூடாக கோஷங்களை எழுப்பி ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கவுள்ளோம்.

யாழில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் | Unemployed Graduates Protest In Jaffna

அரசாங்கம் உருவாகி நான்கு மாதங்களே கடக்கின்றது. எமக்கான பதில் அழுத்தம் மூலமே கிடைக்கபெறுமானால் அதனை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார் . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம் யாழ். நகரத்தின் ஊடாக பயணித்து ஆளுநர் அலுவலகத்தை வந்தடைந்தது.

இதன் போது போராட்டக்காரர்கள் ஆளுநரை சந்திக்க முற்பட்டனர். இருப்பினும் ஆளுநரின் செயலாளர் ஒருவர் குறித்த போராட்டக்காரர்களை சந்தித்து நான்கு பேர் மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும் கோரிக்கை மகஜர் கையளிக்க முடியும் என தெரிவித்தார்.

தமக்கு அரசாங்க வேலை பெற்றுத் தருவேன் என உறுதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

காவல்துறையினருடன் தர்க்கம்

அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டதால் காவல்துறையினருடன் தர்க்கம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து குறித்த சிலரை ஆளுநர் பேசுவதற்கு அழைத்தார்.

யாழில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் | Unemployed Graduates Protest In Jaffna

போராட்டக்காரர்களைச் சந்தித்த ஆளுநர் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை நாடு முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார். இதனை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். 

யாழில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் | Unemployed Graduates Protest In Jaffna

செய்திகள் - பிரதீபன்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்