கிளிநொச்சி வெடிப்பு சம்பவம்: தீவிர தேடுதலில் மீட்க்கப்பட்ட மேலும் பல வெடி குண்டுகள்
கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் இன்றும் (30) வெடிக்காத நிலையில் இருந்த வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் நேற்றையதினம் (29) ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு
இதன்போது வெடிக்காத நிலையில் இருந்த வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த வெடி குண்டுகளை மீட்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
