கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள் பத்திரமாக மீட்பு
Kilinochchi
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்று(01.10) வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
முகமாலை வடக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டினை சுத்தம் செய்யும் போது பள்ளம் தோண்டிய போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பின்னர், வீட்டு உரிமையாளர் இது குறித்து பளை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
குண்டுகளை மீட்கும் பணி
அதனைதொடர்ந்து, கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

20ம் ஆண்டு நினைவஞ்சலி