சிறிலங்காவுக்கு அடுத்த இறுக்கம் - இணைத் தலைமை நாடுகள் வகுத்துள்ள திட்டம்
வரைவுத் தீர்மான முன்வைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் சிறிலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான வரைவுத் தீர்மானத்தை முன்வைக்க இணைத் தலைமை நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இணைத் தலைமை நாடுகளில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, வடக்கு மசிடோனியா, மற்றும் மன்டினீக்ரோ ஆகிய நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
சிறிலங்காவுக்கு அழுத்தம்
இந்த நாடுகளின் சிறிலங்கா தொடர்பான வரைவுத் தீர்மானத்தில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்தப்படவுள்ளது.
அத்துடன் மாகாண சபைத் தேர்தல், 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய அதிகார பரவலாக்கம், உள்ளிட்ட பல விடயங்களை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஐ.நா அமர்வு - முதல் நாளே சிறிலங்காவிற்கு அழுத்தம்
ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் மீண்டும் சிறிலங்கா - சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை!
YOU MAY LIKE THIS

