சிறிலங்காவின் அடாவடியை சிதறடித்த ஐ.நா (காணொளி)
இலங்கை மீதான தீர்மானம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்காவின் அடாவடியும் அதீத தன்னம்பிக்கையும் இம்முறை செயற்படவில்லை என பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வி. ரவிக்குமார் தெரிவித்தார்.
இலங்கை மீதான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐ.நா அரங்கில் இருந்து விசேட காணொளி ஒன்றின் மூலம் எமது ஊடகத்திற்கு அதன் பின்னணி தொடர்பில் கூறுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது இராஜதந்திரத்தின் மூலம் இலங்கை மீதான தீர்மானத்தை முன்னகர்த்தக்கூடிய பல்வேறு விடயங்களை மேற்கொண்டிருந்தார்.
சாதகமான களநிலைமை
கடந்த நாட்களில் இலங்கை தனக்கு சாதகமான ஒரு கள நிலைமையை ஏற்படுத்திக் கொண்டாதாக காட்டிக் கொண்டது.
அதிலும் குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா உட்பட பல முக்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கும் மேலதிக விடயங்களை காணொளியில் காணலாம்,