வாக்குறுதிக்கு மாறாக சிறிலங்காவின் செயல் - ஐ.நாவில் பகிரங்கம்
ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கை, ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல்களுக்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை பொய்ப்பித்துள்ளதாக காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.
ஜெனிவா - ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று ஆரம்பித்த 51ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அர்த்தபூர்வமான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் இடம்பெற வாய்ப்பில்லை.
ஆர்ப்பாட்டங்களிற்கு எதிரான அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல்களிற்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை அடியோடு பொய்ப்பித்துள்ளது.
அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் என்னையும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் கைதுசெய்து சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தனர்.
வாக்குறுதிக்கு முரணாக செயற்பட்ட அரசாங்கம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தப் போவதில்லை என்ற வாக்குறுதிக்கு முரணாக அரசாங்கம் செயற்பட்டுள்ளது.
நாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றது” என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
