சர்வதேசத்தின் கோரப்பிடியில் சிறிலங்கா - தப்புமா..! சிக்குமா..!
இராஜதந்திர நகர்வு
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு சாதகமான நிலைப்பாட்டை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது இராஜதந்திர நகர்வு ஊடாக தோற்றுவித்திருக்கிறார் என பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வி. ரவிக்குமார் கூறுகிறார்.
இன்று எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறிலங்காவின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க சமநிலை தன்மையில் நடந்துகொள்ளும் நிலையில், மேற்குலகுடன் தந்திரமாக இருந்து வருகிறார்.
இந்தியாவினுடைய பார்வை
இந்தியா சிறிலங்கா விடயத்தில் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனை அவர்களின் செயற்பாடுகள் தெளிவாக காண்பிக்கின்றன.
இந்தியாவினுடைய பார்வையில், சிறிலங்கா தனது பார்வைக்குள் இருக்க வேண்டும் எனவும், அதிலும் வடக்கு கிழக்கை தனது வலயத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் எண்ணிக்கொள்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேசத்தின் பிடியில் சிறிலங்கா சிக்கியுள்ள நிலையில், நடந்த மனித உரிமை மீறல்களை அடுத்து வரும் தலைமுறைக்கும் கடத்த வேண்டும் என அவர் கூறுகிறார்.
அவர் தெரிவித்த மேலதிக விடயங்கள் காணொளி வடிவில்,
