கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம்! காவல்துறையினர் வெளியிட்ட அடையாளங்கள்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
பமுனுகம, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பமுனுகம காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டுள்ளதுடன்,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரணமடைந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க, 5 அடி 3 அங்குலம் உயரமுடைய ஒரு ஆண் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது அவர் குட்டையான முடியைக் கொண்டிருந்ததுடன், பச்சை நிற டி-சர்ட் மற்றும் நீலம், வெள்ளை கலந்த சாரம் அணிந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது ராகம வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பமுனுகம காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்