தமிழ் பிரதேசமொன்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு (படங்கள்)
அடையாளம் தெரியாத சடலம்
குறித்த வீதியின் ஓரத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமக்களினால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை காவல்துறையினர் பார்வையிட்டுள்ளனர்.
நீதவானின் உத்தரவு
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலத்தினை உறவினர்கள் முன்வந்து அடையாளம் காட்டும் வரை பதின்நான்கு நாட்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கும் படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சடலம் வர்த்தத நிலையங்களுக்கு அருகில் காணப்பட்டதுடன், சம்பவ தினம் போயா விடுமுறை என்பதனால் மட்டக்களப்பு நகரத்தில் உள்ள அதிகளவான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு பொதுமக்களின் நடமாட்டங்களும் குறைவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர்மேற்கொண்டு வருகின்றனர்.
