ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பிரித்தானிய இளவரசி
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசியும் மன்னர் சார்ள்சின் இளைய சகோதரியுமான ஆன் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய இளவரசி
பிரித்தானிய இளவரசி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்த நிலையில், அவருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள மாஸ் ஆடைத்தொழிற்சாலையை அவர் பார்வையிட்டதுடன், அங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டிருந்தார்.
சேவ் த சில்ரன்
இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் நலன்கள் தொடர்பான ஐ.நா நிறுவனமான சேவ் த சில்ரனின் கொழும்பு அலுவலகத்திற்கு பிரித்தானிய இளவரசி ஆன் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை முழுவதும் மனிதாபிமான பணிகளை ஆற்றிவரும் குறித்த அமைப்பின் பணிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
யாழுக்கான பயணம்
இந்த நிலையில், பிரித்தானிய இளவரசி ஆன் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Her Royal Highness Princess Anne, the Princess Royal of the #UnitedKingdom, accompanied by her spouse Vice Admiral Sir Timothy Laurence, who are on a three-day official visit to #SriLanka, met President Ranil Wickremesinghe at the President’s House a short while ago.#LKA #PMD pic.twitter.com/QLBWsbkB0b
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) January 10, 2024
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |