ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணர்வை புறம் தள்ளிய சிறிலங்கா - கடும் கண்டனம்!

United Nations Missing Persons Geneva Ali Sabry Sri Lanka
By Kalaimathy Sep 13, 2022 05:37 AM GMT
Report

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது.

அதன் போது, அங்கு உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கருத்துத் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் உறவுகள்

ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணர்வை புறம் தள்ளிய சிறிலங்கா - கடும் கண்டனம்! | United Nation Human Rights Missing Persons Geneva

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில், அங்கு இலங்கை தொடர்பான விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக கோரிவரும் எமக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எந்த விடயமும் முன்வைக்கப்படாமையானது கவலையளிக்கிறது. 

இதேவேளை இந்த கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துக்கிறோம். 

இதேவேளை பாதிக்கப்பட்ட தரப்புக்களாக நாம் இன்று 13 ஆண்டுகளாக போராடி எந்த தீர்வும் இல்லாது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பித்த தொடர்ச்சியான போராட்டம் இன்று 2015 ஆவது நாளாக தொடர்கிறது.

அலி சப்ரியின் கருத்திற்கு கடும் கண்டனம்

ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணர்வை புறம் தள்ளிய சிறிலங்கா - கடும் கண்டனம்! | United Nation Human Rights Missing Persons Geneva

இவ்வாறான நிலையில், சுயாதீன உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்த தேவையான ஆதரவு மற்றும் வளங்களை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக்கொடுக்குமென சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்றைய முதல் நாள் அமர்வில் தெரிவித்திருந்தார்.

மேலும் புலம்பெயர் மக்களுக்கான அலுவலகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் அவர்களுடன் இருக்கும் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும், அதிபர் சட்டத்தரணியுமான அலி சப்ரியின் கருத்தானது எமது உணர்வுகளை புறந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்ததோடு, அவரின் கருத்துக்கு கடும் கண்டணத்தையும் வெளியிட்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி