சகோதரனின் அழைப்பை நிராகரித்த நவீன் திஸாநாயக்க!
united
samagi
jana-balawegaya
By Vasanth
ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.
நவீன் திஸாநாயக்கவின் சகோதரரான மயந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், நான் ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் செல்லமாட்டேன்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு எனது சகோதரருக்கு தேர்தலுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தேன். அந்த அழைப்பை அவர் நிராகரித்துவிட்டார். எப்படி இருந்தாலும் அவரின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆனாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் வராது என்றே நம்புகின்றேன்.
25 வருடங்களாக அப்பதவியில் இருப்பவர் இன்னும் பல வருடங்கள் இருப்பதற்கு முற்படுவார்.“ எனத் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி