ஐ.நா, அமெரிக்கா போன்ற பணம் படைத்த வல்லரசு நாடுகளுக்கே நல்ல நைனாவாக இருக்கின்றது!
ஐ.நா ஒரு கையாலாகாத நைனா, அமெரிக்கா போன்ற பணம் படைத்த வல்லரசு நாடுகளுக்கே நல்ல நைனாவாக இருக்கின்றார்கள். எந்த ஒரு பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்துக்கும் அவர்களால் தீர்வு காண முடியாது எனமட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நடேசன் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகத்தை இன்று ஆடிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இஸ்ரேல் பலஸ்தீனத்தின் மீது இரக்கமற்ற தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுடன் சுரண்டுவதும் இஸ்ரேல் சண்டை பிடிப்பதும் இது போன்ற செயற்பாடுகள் மூலம் பலஸ்தீனர்கள் நியாயம் கேட்டு ஐ.நா செல்வதும் இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இருந்தாலும் இதற்கான ஒரு சரியான தீர்வு ஐ.நாவால் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை. ஹெம் டேவிட் ஒப்பந்தம் மூலமாக கிளின்டன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இதைத் தீர்ப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்து இருந்தார். அந்தக் காலகட்டத்திலும் இதே கமாஸ் இயக்கம் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
நான்கு இராணுவம் இறந்ததற்காக இன்று ஒட்டுமொத்த மக்களையும் பழி வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். ஊடக நிறுவனங்களின் கட்டடங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கிருந்தவர்களின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியாது .
ஐ.நா ஐ.நா என்று சொல்லும் இந்த ஐ.நாவானது எமது இனத்திற்கும் ஐ.நாவில் கிடைத்த தீர்வு என்ன? என்னைப் பொறுத்தவரையில் நான் திட்டவட்டமாக கூற விரும்புகின்றேன் ஐ.நா ஒரு நைனா என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.