ஐ.நா வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்படாத இலங்கை தொடர்பான புதிய தீர்மானம்!
srilanka
budget
unitednations
By Vasanth
இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை செயற்படுத்த தேவையான நிதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இல்லை என ஐ.நா சபையின் திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டப் பிரிவு இயக்குனர் ஜோஹனேஸ் ஹுஸைமான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் கோரோ ஒனோஜிமாவுக்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த தீர்மானத்தில் தொடர்புடைய விதிகள் 2021 ஆம் ஆண்டிற்கான திட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அல்லது 2022ஆம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரைவுத் தீர்மானம் A / HRC / 46 / L.1க்கு, கூடுதலாக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் உள்ளிட்ட பல செலவுகளை அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.