சஜித் அணியிலிருந்து இரு எம்பிக்கள் 'பல்டி'
sri lanka
people
sajith premadasa
By Shalini
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே ஆகிய இருவருமே, கட்சியில் வகிக்கும் பதவிகள் மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து இவ்வாறு விலகியுள்ளனர். .
இது தொடர்பில் கட்சி செயலாளருக்குத் தெளிவுபடுத்தி அவர்கள் இருவரும் கடிதமும் அனுப்பி வைத்துள்ளனர்.
வரவு - செலவுத் திட்ட கூட்டத் தொடரின் போது இவ்விருவரும் அரசுடன் இணைவார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.