அமெரிக்காவின் திறைசேரியிலும் டொலர் இல்லை: சீனாவிடம் கடன் வாங்கிய அமெரிக்கா

srilanka China United states Treasury T.U . Kunacekara
By Mkkamshan Dec 17, 2021 08:08 AM GMT
Report

உலகில் அமெரிக்க டொலர்கள் சீனாவிலேயே அதிகளவில் உள்ளன.  இந்த உண்மை அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கும் தெரியாது எதிர்க்கட்சியினருக்கும் தெரியாது என  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டியூ. குணசேகர (T.U . Kunacekara) தெரிவித்துள்ளார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அமெரிக்கா அதிகளவில் சீனாவிடம் இருந்தே கடனை பெற்றுள்ளது. பிணைமுறிகளில் இந்த கடன்கள் பெறப்பட்டுள்ளன. சீனாவே கடன் வழங்க முன்வருகிறது. சீனாவிடமே உலகில் அதிகளவான நிதி கையிருப்பில் உள்ளது.

அமெரிக்க காங்கிரஸில் நேற்றைய தினமும் கடன் பெறும் எல்லை அதிகரிக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டது. இவற்றை எமது பொருளாதார நிபுணர்களோ, நாடாளுமன்றமோ நாட்டுக்கு தெரியப்படுத்தவில்லை.

சுதந்திரத்திற்கு பின்னர் நாம் எதிர்நோக்கும் ஆழமான, மிகப் பெரிய தீர்மானகரமான நெருக்கடியை தற்போது எதிர்நோக்கி வருகின்றோம். இந்த நெருக்கடியின் மூன்று பக்கங்கள் உள்ளன.

ஒன்று உலக நிதி நெருக்கடி.பொருளாதார நெருக்கடி. அவற்றின் தாக்கங்கள் எமக்கும் உள்ளன. இதனால், எமது கட்டுப்பாட்டை மீறி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். சர்வதேச நிலைமைகளே இதற்கு காரணம்.

இரண்டாவது நெருக்கடி கொரோனா உலக தொற்று நோய். இது முழு உலகத்தையும் பாதித்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக உலக பொருளாதாரத்தை மூட நேர்ந்தது. மூடிய பின்னர் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

உற்பத்தி குறையும் போது விலைகள் அதிகரிக்கும். அதேபோல் முழு உலகிலும் தற்போது நிதி நெருக்கடியும் காணப்படுகிறது. எமது நாட்டில் போன்று அமெரிக்காவின் திறைசேரியிலும் டொலர் இல்லை. அவர்கள் டொலரை அச்சிடுகின்றனர்.

சீனாவிடம் 4.5 ட்ரில்லியன் டொலர் கையிருப்பில் இருக்கின்றது. சீனா உலகில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 5வது இடத்தில் இருக்கின்றது.

உலகில் அமெரிக்க டொலர்கள் சீனாவிலேயே அதிகளவில் உள்ளன. இந்த உண்மை அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது. எதிர்க்கட்சியினருக்கும் தெரியாது. தெரிந்த பொருளாதார நிபுணர்களும் இவற்றை கூறுவதில்லை எனவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025