வான் தாக்குதல் மூலம் ஈரானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ள பைடன்
america
united states
joe-biden
By Vasanth
சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்து ஜோ பைடனிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜோ பைடன் பதிலளிக்கையில் ‘‘சிரியாவில் அமெரிக்க வான்வழி தாக்குதலை அங்கீகரிப்பதற்கான எனது முடிவை ஈரான் பார்க்க வேண்டும்.
இது அமெரிக்க நலன்களை அல்லது அமெரிக்க குடி மக்களை அச்சுறுத்தும் பயங்கரவாத குழுக்களின் ஆதரவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் தண்டனை இன்றி செயல்பட முடியாது கவனமாக இருந்து கொள்ளுங்கள்’’ என கூறினார்.
ஜோ பைடனின் எச்சரிக்கை குறித்து ஈரான் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.