கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம்: மீண்டும் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை
கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இலங்கையில் (Sri Lanka) பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunge) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையி்ல், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் மாணவர்களைப் பற்றி சிந்தித்து மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
கொழும்பு (Colombo) 7 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கல்வி நடவடிக்கைகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் நடத்தப்பட்டு வருகின்றன. ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கற்கும் சுமார் 3500 மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர் கையேடு தயாரிக்கும் பணி ஸ்தம்பிதமடைந்து.
மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதும் தாமதமடைந்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |