மீண்டும் பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை (25) மீண்டும் ஒரு அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்ட சம்பளங்கள், மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் பிற படிகளை மீண்டும் வழங்கக் கோரி குறித்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், பல்வேறு ஆசிரியர் தொழிற்சங்கங்களும் நவம்பர் 30 அன்று சுகயீன விடுமுறை (sick leave) போராட்ட நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன.
வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகள்
2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகள் தங்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்கவில்லை என்று கூறி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் நேற்று (23) ‘தேசிய எதிர்ப்பு தினத்தை’ அறிவித்ததுடன் அடுத்த வாரம் தங்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாகவும் அவை எச்சரித்துள்ளன.

இந்தநிலையில், ஏற்கனவே நவம்பர் 18 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், நாளை மீண்டும் ஒரு அடையாள வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்ட சம்பளங்கள், மேலதிக நேர கொடுப்பனகள் மற்றும் பிற படிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கையாகும்.
தங்கள் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |