யாழ். பல்கலைக்கழக மோதல் விவகாரம்! துணைவேந்தரின் மனிதாபிமான செயல்
Investigation
Protest
University of Jaffna
By Vasanth
உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடம் நேரில் சென்று, மனிதாபிமான அடிப்படையில் வகுப்புத் தடை விலக்கப்பட்டுள்ள செய்தியை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்கள் உணவு ஒறுப்பில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும், மாணவர் நலன் கருதியும் துணைவேந்தருக்குஅளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இத்தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக துணைவேந்தர் தெரிவித்துள்ள போதும், மாணவர்கள் எழுத்து மூலமாக அதனை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி