பேராதனை பல்கலையில் பெருமளவு மாணவர்களுக்கு கொவிட்
covid
student
University of Peradeniya
By Sumithiran
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 64 மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளாா்.
தொற்றுக்குள்ளான மாணவர்கள் பல்கலைக்கழக இடைநிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
