இணைய விளையாட்டின் விபரீதம் - பல்கலை மாணவன் சடலமாக மீட்பு
Jaffna
Sri Lanka
By Beulah
இணைய விளையாட்டுக்கு அடிமையானமையால் ஏற்பட்ட மனவிரக்தியில் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - அறிவியல்நகரில் பட்டப்படிப்பை மேற்கொண்ட மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த 22 வயதான புஸ்பராசா எழில்நாத் என தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி