பல்கலைக்கழக மாணவர்கள் செல்லும் மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு : மூன்று பெண்கள் கைது
பல்கலைக்கழக மாணவர்கள் 'செல்லும்' மசாஜ் நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டநிலையில் மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி கெலிஓயா பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்ட மசாஜ் நிலையமொன்றையே சுற்றிவளைத்ததாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
முகாமையாளர் தப்பியோட்டம்
சுற்றிவளைப்பின் போது முகாமையாளர் தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடிக்கடி செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்
பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மசாஜ் நிலையத்திற்கு அடிக்கடி செல்வதாக காவல்துறையினர் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், பேராதனை காவல்துறை நிலைய கட்டளைத் தளபதியின் தலைமையில் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |