பெய்ரூட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர அறிவிப்பு
பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு, அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெய்ரூட்டில் இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள், மிக நெருக்கமான கால இடைவெளியில் நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்களைத் தாம் நடத்தியதாக இஸ்ரேல் உரிமை கோரியுள்ளது.
அவசர எச்சரிக்கை
இந்தச் சூழலில், பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்கச் சொத்துகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் நிலவுவதாகக் கருதப்படுகிறது.
ஈரான் தனது அண்டை நாடுகள் மீது ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டிருப்பதை ஏற்கனவே நிரூபித்துள்ள நிலையில் தற்போது லெபனானில் உள்ள அமெரிக்க உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஈரானியக் கொள்கையில் ஏற்படும் ஒரு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இதுவரை ஈரான், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்களின் ஆதரவுத் தளம் உள்ள லெபனான் பகுதிகளில் தாக்குதல் நடத்தாமல் தவிர்த்து வந்தது.
இருப்பினும், தற்போது அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அது லெபனானை இந்த மோதலுக்குள் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்லும் ஒரு மிகப்பெரிய தீவிரப்பாடாக அமையும் எனக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்