அமெரிக்காவை எள்ளி நகையாடிய ஈரானிய சபாநாயகர்...!
ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), அமெரிக்காவை எள்ளி நகையாடியிருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளைகுடா பகுதியில் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்துச் சபாநாயகர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
பிள்ளையானின் வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்! CID விசாரணையில் அம்பலம்
ஈரானியப் படைகள்
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “ஈரானைத் தொடர்ந்து 37 முறை தோற்கடித்த பிறகு அவர்கள் தொடங்கிய இந்த அற்புதமான திட்டமிடல் இல்லாத போர், இப்போது ஆட்சி மாற்றம் என்ற நிலையிலிருந்து ஹே ! யாராவது எங்கள் விமானிகளைத் தேட முடியுமா ? தயவுசெய்து ? என்ற நிலைக்குத் தரம் குறைந்துவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
After defeating Iran 37 times in a row, this brilliant no-strategy war they started has now been downgraded from “regime change” to “Hey! Can anyone find our pilots? Please?🥺”
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 3, 2026
Wow. What incredible progress. Absolute geniuses.
முன்னதாக கெஷ்ம் தீவுக்குத் தெற்கே அத்துமீறி நுழைந்த எதிரி நாட்டுப் போர் விமானத்தை ஈரானியப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
அந்த விமானத்தில் இருந்தவர்களின் நிலை குறித்து அமெரிக்கத் தரப்புக் கவலை கொண்டுள்ள நிலையில் சபாநாயகரின் இந்தப் பதிவு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்