ஈரானில் F-15 போர் விமான ஊழியர் ஒருவரை மீட்டது அமெரிக்கா!
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15 போர் விமானத்தின் ஊழியர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் CBS செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய தகவலின்படி குறித்த போர் விமான ஊழியர் அமெரிக்கப் படைகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானியப் புரட்சிகர காவல்படை (IRGC) முன்னதாக அறிவித்திருந்தது.
ஈரானியத் தரப்புகள்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போன விமானிகளைத் தேடும் பணியில் அமெரிக்க மற்றும் ஈரானியத் தரப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

இந்தநிலையில், ஒரு விமானி மீட்கப்பட்டுள்ள சூழலில் மற்றைய விமானிகளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பாரிய பணப்பரிசுகளைத் தருவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், அந்த விமானத்தில் இருந்த மற்றொரு ஊழியரின் நிலை குறித்தோ அல்லது எஞ்சிய மீட்பு நடவடிக்கைகள் குறித்தோ பென்டகன் (Pentagon) தரப்பிலிருந்து இதுவரை விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்