நாளைய ஆர்ப்பாட்டத்திற்கு ரணில் தரப்பு ஆதரவு
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு
இலங்கை மக்களால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவை வழங்கியுள்ளது.
எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியே, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
பொதுமக்களுக்கும் அழைப்பு
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதையும் உறுதிசெய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
போராட்டங்களின் போது காவல்துறை மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பிரதமராக அங்கம் வகிக்கும் நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குவதன் தார்மீக அடிப்படை குறித்து எதிர்கட்சியினரும் அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

