மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகளுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த உணவுகளுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் இன்று (11) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிமுனை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகள் சில சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்துள்ளது.

இந்தநிலையில், இன்று (11) மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினரால் குறித்த உணவகங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள்
குறித்த உணவகங்கள் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்ததுடன் உணவகத்தின் கழிவு நீர் உரிய விதமாக அகற்றப்படாமல், புழுக்கள் இளையான் உருவாகியும், அதே நேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப் பட்டிருந்தமை மற்றும் அத்துடன் உணவு பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சிய படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த உணவகத்திற்கு எதிராகவும் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


