வழக்கத்துக்கு மாறான சீருடையில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்
Sri Lanka Police
By Sumithiran
வழக்கத்திற்கு மாறான வகையிலான உடைகளை அணிந்து, வீதிச்சோதனையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மஹியங்கனை கண்டி பிரதான வீதியில் மகாவலி பாலத்திற்கு அருகில் நேற்று (30) இந்த செயற்பாடு அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
“யுக்திய” விசேட நடவடிக்கை
மஹியங்கனை மாபா கடவெவ காவல்துறை பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் 240 பயிற்சி காவல்துறை உத்தியோகத்தர்கள் “யுக்திய” விசேட நடவடிக்கையின் மூலம் போதைப்பொருள் சோதனைகளுக்காக வாகனங்களைச் சோதனையிடுவதற்கு உதவுவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் நோக்கமானது, சம்பந்தப்பட்ட பயிற்சி காவல்துறை அதிகாரிகளுக்கு ஆய்வுகளில் நடைமுறை அனுபவத்தை வழங்குவதாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி