மலையகத்தில் சில தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்
Sri Lanka Upcountry People
Sri Lanka Railways
Railways
Train
Landslide
By Sindu
கடிகமுவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், ரம்புக்கனை, பேராதனை மற்றும் கம்பளைக்கு இடையிலான தொடருந்து சேவைகள் நாளை (24) மற்றும் நாளை மறுநாள் (25) ஆகிய இரண்டு நாட்களும் இடைநிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மண்மேடு அகற்றம்
தொடருந்து மார்க்கத்தில் சரிந்துள்ள மண் மேட்டை அகற்றி, புனரமைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக தொடருந்து சேவையை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து மார்க்கத்தில் சரிந்து விழுந்த மண்ணை அகற்றி, திருத்தப் பணிகளை முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்