உர விநியோகம் குறித்து விவசாயத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
தற்போது கையிருப்பிலுள்ள உரத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட்ட மட்டத்தில் உள்ளதைக் கருத்திற்கொண்டு உர விநியோகம் தொடர்பில் விவசாய அபிவிருத்தித் திணைக்களம் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கையின் போது, கையிருப்பிலுள்ள யூரியா உரத்தை நெற்செய்கைக்கு மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடு முழுவதுமுள்ள விவசாய சேவை நிலையங்கள் ஊடாக மாத்திரமே இந்த உர விநியோகம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெற்செய்கைக்கு முன்னுரிமை
இதேவேளை பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நெற்செய்கை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள உரக் கையிருப்புகளை மிகவும் வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதர பயிர்ச்செய்கைகளை விட நெற்செய்கைக்கு முன்னுரிமை அளித்து, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கம் என விவசாய அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்