வருகிறது உர கப்பல் - நீண்ட காலத்தின் பின்னர் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள யூரியா
Mahinda Amaraweera
Sri Lanka
India
By Sumithiran
யூரியா உரக் கப்பல்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரக் கப்பல் ஜூலை 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
65,000 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிவரும் கப்பல் ஜூன் 28ஆம் திகதி ஓமானில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மகிந்த அமரவீர, ஜூலை 15ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிக்க முடியும் என்றார்.
கமநல சேவை நிலையங்களுக்கு விநியோகம்
உர செயலகம், வர்த்தக உர நிறுவனம் மற்றும் சிலோன் உர நிறுவனம் ஊடாக யூரியா இருப்பு கமநல சேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும்.
நெல் மற்றும் மக்காச்சோள விவசாயிகளுக்கு யால பருவத்தில் உரங்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
