கனடா பிரதமர் விடுத்துள்ள அவசர அழைப்பு
காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) அழைப்பு விடுத்துள்ளார்.
காசாவில் தொடரும் போர்நிறுத்தத்தை முடிவுறுத்தும் வகையில் இஸ்ரேல் மூன்று கட்ட போர்நிறுத்தத்தை முன்வைத்த நிலையில் அதனை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் திட்டத்தை ஆதரித்த பைடன்
அத்துடன் இந்த போர் நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேல் முன்வைத்துள்ள திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (joe biden) ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதன்படி காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் மொத்தமாக வெளியேற வேண்டும். எஞ்சியிருக்கும் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும், இருதரப்பும் ஒப்பந்தங்கள் அடிப்படையில் செயல்பட்டால் விரோதங்களை களைய முடியும் என்று தெரிவித்தார்.
கனடா பிரதமர் தனது எக்ஸ் தளத்தில்
இது தொடர்பில் கனடா பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, உடனடி போர்நிறுத்தம், தடையில்லா மனிதாபிமான உதவிகளை அவசரமாக அதிகரிப்பது மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது.
Canada has been calling for an immediate ceasefire, an urgent increase in unhindered humanitarian assistance, and the release of all hostages. The proposal put forward by @POTUS is an opportunity to end the suffering and return to a path to peace. All parties must seize it.
— Justin Trudeau (@JustinTrudeau) June 1, 2024
துயரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜோ பைடனால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒரு வாய்ப்பாகும். மேலும் அமைதிக்கான பாதைக்கு திரும்ப வேண்டும். அனைத்து தரப்பினரும் அதை கண்டிப்பாக கைப்பற்ற வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |