கிளிநொச்சியிலிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம் !
Kilinochchi
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
By Shalini Balachandran
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தி தருமாறு தமிழ்த்தேசியஇளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தினால் நலிவடைந்து வளர்ந்து வரும் மாவட்டம் என்பது தாங்கள் அறிந்ததே.
இம்மாவட்டத்தின் நகர அபிவிருத்தியில் உடனடியாக செய்து கொடுக்க வேண்டிய விடயங்களை தங்களிடம் முன்வைக்கிறோம்.
நகர அபிவிருத்தி
- கிளிநொச்சியில் பரந்தன் சந்தி, டிப்போ சந்தி, கரடிபோக்கு சந்தி, காக்காக்கடைச்சந்தி மற்றும் வைத்தியசாலை முன்பாக மின்விளக்குச் சமிக்க்கை அமைக்க வேண்டிய தேவை உள்ளது.
- பரந்தன் முதல் பல்கலைக்கழக சந்திவரை இருவழி பாதையை அமைக்க வேண்டிய தேவை உள்ளது.
- நகர்ப் பகுதிகளில் உள்ள பாதசாரி கடவைகளில் தெரு விளக்குகளை அமைத்து தர வேண்டி உள்ளது.
- பரந்தன் முதல், பல்கலைக்கழக சந்திவரை தெரு விளக்குகளை A9 வீதியில் அமைத்து தர வேண்டிய தேவை உள்ளது.
- கிளிநொச்சி நகரில் சுற்றுவட்டம் ஒன்றை அமைத்து, மணிக்கூடு கோபுரம் ஒன்றையும் அமைத்து நகர வசதிகளை ஏற்படுத்தி தாருங்கள்.
மேற்படி விடயங்களை மேற்கொண்டு தருவதன் மூலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க முடியும் என எதிர்பார்த்து இந்த கோரிக்கையை விடுகிறோம்.
பொருத்தமான நடவடிக்கை எடுத்து, மாவட்டத்தில் மேலதிக அபிவிருத்திகளை செய்ய நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோருகின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி