அமெரிக்கா சென்று ஜூலி சங்கை சந்தித்தார் சுமந்திரன்!
அரசாங்கத்தின் திருத்தப்பட்ட பயங்கரவாத சட்டமூலம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் இரு தரப்பினருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜூலி சங் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா முன்றலில் புலம்பெயர்ந்தோரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்: பின்கதவால் தப்பி ஓடிய ரணில் (படங்கள்)
மனித புதைகுழிகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் அமெரிக்காவுக்கு பயணம் செய்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த பயணம் தொடர்பிலும் வடக்கில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் தொடர்பிலும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நல்லிணக்கம் என்பது பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது மாத்திரம் அல்ல எனவும் அதன் பின்னர் மீள கட்டியெழுப்பப்பட வேண்டிய நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக இதன் போது ஜுலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.