ஈரானின் சைபர் தாக்குதல்! உளவுத்திட்ட நகர்வு குறித்து அமெரிக்கா - பிரித்தானியா எச்சரிக்கை
ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்து உளவு பார்க்க 'ஸ்பைவேர்' (Spyware) எனப்படும் உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) வெளியிட்டுள்ள இந்த கூட்டு அறிக்கையின்படி,
“ஈரான் அரசு ஆதரவு பெற்ற சைபர் தாக்குதல்தாரர்கள் "CHOSEN BRICK" எனப்படும் அதிநவீன உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.
திருடப்பட்ட மின்னஞ்சல்கள்
WhatsApp மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக, குறிப்பிட்ட நபர்களை ஏமாற்றித் தாக்கும் 'ஸ்பியர்-ஃபிஷிங்' (Spear-phishing) பிரச்சாரங்களை மேற்கொண்டு, அவர்களின் மின்னஞ்சல்கள், தனிப்பட்ட செய்திகள் மற்றும் இதர முக்கியமான இரகசியத் தகவல்களை இக்குழுவினர் திருடியுள்ளனர்.

பிரித்தானியா உட்பட உலகம் முழுவதும் வாழும், ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் அதிருப்தியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களே இந்த உளவுத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்துள்ளனர்.
ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகத் கருதப்படும் தனிநபர்களை ஒடுக்குவதற்கும், அவர்களைக் கண்காணிப்பதற்கும் ஈரான் இத்தகைய சைபர் தாக்குதல் நடவடிக்கைகளை உறுதியாகப் பயன்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 20 மணி நேரம் முன்