ஈரானுக்கு பேரிடி! கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்த அமெரிக்கா
ஈரான் மற்றும் அதற்குத் துணைபுரியும் அமைப்புகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள ஈரானின் நிதித் தொடர்புகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தாக்குதலைத் தொடங்குவதாகவும், அந்த ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் ஒவ்வொரு பொருளாதார உயிர்நாடியையும் துண்டிப்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அரசு தனது பொருளாதாரத்தைத் தக்கவைக்கப் பயன்படுத்தும் டிஜிட்டல் சொத்துக்கள், தொழில்நுட்பம், தங்கம், வான்வழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய ஐந்து முக்கியத் துறைகளைக் குறிவைத்து இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் நிலைப்பாடு
மேலும், சுமார் 60 நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்கள் மீதும் அமெரிக்க திறைசேரி திணைக்களம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Image Credit: Bloomberg
இந்த மோதலில் தெளிவற்ற பகுதிகளில் இயங்குவது இனி ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்த பெசென்ட், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்தவிதக் குழப்பமும் இருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பொருளாதார ஈடுபாடும், அதற்குப் பொறுப்பானவர்களை அமெரிக்க அதிகாரத்தின் முழுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |