170க்கும் மேற்பட்டோர் பலி அமெரிக்க தாக்குதல்! போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கிறது ஐ.நா

Donald Trump Iran-US Conflict
By Dharu Sep 18, 2026 05:28 PM GMT
Report

ஈரானுக்கு எதிரான போரின் ஆரம்பக் கட்டத்தில் அமெரிக்கா நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்கள் போர்க்குற்றங்களாகக் கருதப்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உண்மை கண்டறியும் குழு தனது புதிய அறிக்கையில் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், தனது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது ஈரான் நடத்திய ஒடுக்குமுறைகள் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களாக அமையலாம் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த சுயாதீன விசாரணை அறிக்கையில்,

உச்சம் தொடும் பதற்றம்! சவூதியில் தரையிறங்கவுள்ள அமெரிக்காவின் 48 F-35 போர் விமானங்கள்

உச்சம் தொடும் பதற்றம்! சவூதியில் தரையிறங்கவுள்ள அமெரிக்காவின் 48 F-35 போர் விமானங்கள்

சர்வதேச குற்றவியல்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற சர்வதேச நீதிமன்றங்களால் எதிர்காலத்தில் சட்ட ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

170க்கும் மேற்பட்டோர் பலி அமெரிக்க தாக்குதல்! போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கிறது ஐ.நா | Us Attack Iran Un Levels War Crime Allegation

ஈரானிய அதிகாரிகளின் தகவல்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானின் தெற்கு நகரமான மினாப்பில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 120 குழந்தைகள் மற்றும் 26 ஆசிரியர்கள் உட்பட குறைந்தது 156 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

பலி எண்ணிக்கையில் சிறு முரண்பாடுகள் இருந்தாலும், சமீபத்திய அமெரிக்க இராணுவ வரலாற்றில் மிக மோசமான பொதுமக்கள் உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது.

அதே நாளில், தெற்கு நகரமான லாமெர்டில் உள்ள விளையாட்டு மையம் மற்றும் குடியிருப்புப் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதலையும் ஐ.நா குழு விசாரித்தது.

இத்தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு வான்வழித் தாக்குதல்களிலும், பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தும் வகையிலான தன்னிச்சையான தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியுள்ளது” என்றும், இவை போர்க்குற்றங்களாகக் கருதப்பட போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஐ.நா அறிக்கை சுட்டிகாட்டுகிறது.

நாடு கடத்தப்படவுள்ள பசில்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள செயன்முறை

நாடு கடத்தப்படவுள்ள பசில்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள செயன்முறை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்