ஈரானின் நடான்ஸ் அணு நிலையத்தை மீண்டும் தாக்கிய அமெரிக்காவின் Bunker buster
ஈரானின் மிக முக்கிய அணு செறிவாக்கு நிலையமான நடான்ஸ் (Natanz) மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இன்று காலை நடத்திய வான்வழித் தாக்குதலில் இலக்காகியுள்ளது.
ஈரானின் அணு ஆற்றல் அமைப்பு (Atomic Energy Organization of Iran) வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் குற்றச் செயலால் நடான்ஸ் செறிவாக்கு வளாகம் இன்று காலை தாக்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருதரப்பு கூட்டு தாக்குதலால்
இதன்படி இன்று மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு கூட்டு தாக்குதலால் நிலையத்தின் நுழைவாயில்கள் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,
“ஈரான் தரப்பில் இருந்து IAEA-க்கு தகவல் அளிக்கப்பட்டது. தளத்தின் வெளிப்புறத்தில் கதிரியக்க அளவில் எந்த உயர்வும் இல்லை (no increase in off-site radiation levels).
தற்போது IAEA இந்த அறிக்கையை ஆய்வு செய்து வருகிறது.
இராணுவ நடவடிக்கை
அணு விபத்து ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க இரு தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளில் கட்டுப்பாடு காட்ட வேண்டும்.
தாக்குதலால் கதிரியக்க பொருட்கள் கசியவில்லை. அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை” என கூறியுள்ளது.
நடான்ஸ் தளம் போரின் முதல் வாரத்திலும் (பெப்ரவரி 28) தாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தாக்குதல் bunker buster ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |