அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்ட விசாக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் 80,000 இற்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்காலிக பணி
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றார்.

இதையடுத்து, குடியேற்றம் தொடர்பாக பல கடுமையான கட்டுப்பாடுகளை அவர் அறிவித்த நிலையில் விசாக்களுக்கான நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.
இந்தநிலையில், கடந்த பத்து மாதங்களில் மாணவர், சுற்றுலா, தற்காலிக பணிக்காக வரும் குடியேற்றம் அல்லாத 80,000 இற்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட மீறல்
இதில் பாதிக்கும் மேற்பட்டவை மூன்று முக்கிய காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,000 விசாக்களும், தாக்குதல் போன்ற காரணங்களுக்காக 12,000 விசாக்களும் மற்றும் திருட்டு வழக்கில் சிக்கிய காரணத்தால் 8,000 விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், காலாவதியான மற்றும் சட்ட மீறல்களுக்காக 6,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் விசாக்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |