சுற்றுலா விடுதியில் அமெரிக்க பிரஜை சடலமாக மீட்பு (படம்)
இலங்கையில் சுற்றுலா விடுதியொன்றிலிருந்து 54 வயதான அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தங்காலை − நக்குனுகமுவ பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்தே நேற்றைய தினம் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 2014ம் ஆண்டு முதல் தங்காலை பகுதியில் தனது தாயுடன் தங்கியிருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது..
எனினும், இந்த நபரின் தாய் கடந்த 6 மாத காலமாக திக்வெல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபருக்கு பெண்ணொருவரே உணவு வழங்கி வந்துள்ளதாகவும், நேற்றைய தினம் உணவு வழங்க வந்த வேளையிலேயே அவர் உயிரிழந்ததை அவதானித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதையடுத்து, உணவு வழங்க வருகை தந்த பெண், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.