இலங்கையில் மின்வெட்டை தீர்மானிக்கப்போகும் அமெரிக்க நிறுவனங்கள் - வெளியான அறிவிப்பு
srilanka
powercut
u s
By Sumithiran
இலங்கையில் எதிர்காலத்தில் அமெரிக்க நிறுவனங்களே மின்வெட்டை தீர்மானிக்கப்போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசி அலாவத்துல்லா (J c Alawatullah) தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவையும் இந்தியாவையும் திருப்திப்படுத்துவதற்காக சொத்துக்களை வழங்குகின்றது. சீனாவிற்கு நிலங்களை வழங்குகின்றது.
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா கையகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காகவே இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் திருகோணமலை எண்ணெய் குதங்கள் அமைந்துள்ள பகுதிக்கு சென்றார்.
அரசாங்கம் சீனாவிற்கு சொத்துக்களை விற்பனை செய்கின்றது. அதேவேளை கெரவலப்பிட்டிய மின்நிலையத்தினை அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய முயல்கின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.