இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் கரிசனை
Sri Lanka
United States of America
Maldives
By Vanan
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் இலங்கையுடனான தனது பங்காளித்துவத்தை பெரிதும் மதிப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்கா முகவர் அமைப்பின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி மொஹமட் மொய்சுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பொருளாதார மீட்சி
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலின் போது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம், இலங்கையின் துறைமுக உள்கட்டமைப்பில் 550 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்