ரணிலின் தந்திரோபாய எச்சரிக்கை : தமிழர் தரப்புக்கு முக்கிய செய்தி
தமிழ் மக்களின் இருப்பை தக்க வைத்து கொள்ள, தமிழ் அரசியல் தலைமைகள் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணம் அவசியப்பட்டுள்ளதாக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தந்திரோபாயமாக காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாகவும், மிகத் தெளிவான பாதையில் ஒன்றிணைந்து தமிழ்கட்சிகள் செயற்படாவிட்டால், நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என வடக்கு- கிழக்கு குடிசார் சமூக குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று(19) இடம்பெற்ற விசேட அரசியல் கலந்துரையாடலில் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெளிவுபடுத்தியுள்ளார்.
செய்ய வேண்டியது என்ன
இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் செய்ய வேண்டியது என்ன எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இந்தக் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.
பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற் நிகழ்வில் கருத்துரைகளை அரசியல் ஆய்வாளர்களான அ.யதீந்திரா, நிலாந்தன் மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் வழங்கியுள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் பிரதிநிதிகளும் இந்க் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
