டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
நேற்றுடன் (22) ஒப்பிடுகையில், இன்று (23) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றுள்ளதுடன் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (23.07.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.64 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.87 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 457.59 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.94 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.39 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230.16 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.49 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255.46 ஆகவும் விற்பனைப் பெறுமதி 266.12 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 6 மணி நேரம் முன்