அமெரிக்காவிற்கு தொடரும் இழப்பு : வீழ்த்தப்பட்டது மற்றுமொரு ஆளில்லா விமானம்
Iran
Drones
Iran-US Conflict
By Jaso
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே, அமெரிக்காவின் MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்றை ஈரானிய இராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக அந்த இராணுவம் அறிவித்துள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள, ஈரானிய இராணுவத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் இயக்கப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இந்த ஆளில்லா விமானம் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை ஈரானின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்