அமெரிக்க அரச ஊழியர்களுக்கு ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

Donald Trump United States of America World
By Shalini Balachandran Jan 30, 2025 03:42 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்காவில் (United States) அரசு பணியில் இருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு எட்டு மாத சம்பளம் ஒன்றாக வழங்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில், பாதுகாப்புத்துறை, தபால் துறை தவிர்த்த பிற அரசு பணிகளில் 23 லட்சம் பேர் உள்ளன நிலையில், இத்தனை அரசு ஊழியர்கள் தேவையில்லை என சட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜாவின் மறைவு பேரிழப்பாகும் : இராமலிங்கம் சந்திரசேகர் இரங்கல்

மாவை சேனாதிராஜாவின் மறைவு பேரிழப்பாகும் : இராமலிங்கம் சந்திரசேகர் இரங்கல்

அதிரடி உத்தரவு

இந்தநிலையில், அரசு துறைகளில் திறன் மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இதே கரு்ததை தெரிவித்து வருகின்ற நிலையில், மீண்டும் பொறுப்பேற்றது முதல் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் டிரம்ப் நிர்வாகம், அரசு ஊழியர்களுக்கு இமெயில் மூலம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதில் அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து பதவி விலகும் திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த இமெயில், 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்டடுள்ளது.

அமெரிக்க அரச ஊழியர்களுக்கு ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு | Us Gov Employee Slaries Trump Announcement

இதனடிப்படையில், பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முடிவெடுக்க பெப்ரவர் ஆறாம் திகதி வரை அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளதுடன் ஊழியர்களின் பணி திறமையை ஆய்வு செய்து, அவர்களை தொடர்ந்து வைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்பட்டுள்ளது.

தப்பிய முன்னாள் ஜனாதிபதிகள்: அநுர அரசுக்கு தடையான அரசியலமைப்பு

தப்பிய முன்னாள் ஜனாதிபதிகள்: அநுர அரசுக்கு தடையான அரசியலமைப்பு

கடும் அதிருப்தி

இந்த ஈமெயில் அறிவிப்பு, எதிர்க்கட்சியினர் மத்தியிலும், தொழிற்சங்கத்தினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் ஊழியர்கள் யாரும் பதவி விலக வேண்டாம் என ஒன்றரை லட்சம் பேரை உறுப்பினராகக் கொண்ட அமெரிக்க கருவூலத்துறை ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரச ஊழியர்களுக்கு ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு | Us Gov Employee Slaries Trump Announcement

எட்டு மாதங்கள், வேலையே செய்யாமல் யாருக்கும் சம்பளம் தருவதற்கு, அதிபராக இருந்தாலும் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது என்று எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்க சட்டத்தின் கீழ், எந்தவொரு ஊழியரும் ஒரு வருடத்தில் பத்து நாட்களுக்கு மேல் வேலை செய்யாமல் சம்பளம் பெற முடியாது எனவே இதை நம்பி ஊழியர்கள் யாரும் ஏமாந்து விட வேண்டாம் என சங்கத்தினரும் மற்றும் எதிர்கட்சியினரும் ஊழியர்களை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதுபானசாலை விவகாரம்... உண்மைகளை மறைக்கும் அநுர அரசு : சாடும் சுமந்திரன்

மதுபானசாலை விவகாரம்... உண்மைகளை மறைக்கும் அநுர அரசு : சாடும் சுமந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்