ஈரானின் முக்கிய புள்ளிகளின் தலைகளுக்காக அமெரிக்கா அறிவத்த பெருந்தொகை பரிசு
ஈரானின் புரட்சிப் பாதுகாப்புப் படையின் முக்கிய தலைவர்களைப் பற்றிய தகவலை வழங்குவோருக்கு அதிகபட்சமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் வரை பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மொத்தம் 10 பேரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஆறு பேரின் பெயர்கள் மட்டுமே வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய தலைவர்கள்
அந்த பட்டியலில் ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் ஈரானின் தேசிய உயர்மட்ட பாதுகாப்பு சபையின் செயலாளர் அலி லரிஜானி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
Got information on these Iranian terrorist leaders?
— Rewards for Justice (@RFJ_USA) March 13, 2026
Send us a tip. It could make you eligible for a reward and relocation. pic.twitter.com/y7avkqdGWw
லரிஜானி இன்று தெஹ்ரான் நகர மையத்தில் நடைபெற்ற அரசுக்கு ஆதரவான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இவர்கள் ஈரானின் புரட்சிப் காவல்படையின் பல்வேறு பிரிவுகளை கட்டுப்படுத்தி வழிநடத்தும் முக்கிய தலைவர்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |