சுயேச்சை எம்பிக்கு ஐ.நாவின் ICCPR விதி பாயுமா? U.S இன் பரசூட் பிரிவு தரையிறங்குமா?
இந்தியாவுக்கு எதிரான அணுவாயுத சகோதர எதிரியான பாகிஸ்தானில் இந்த வாரம் அமெரிக்க ஈரானிய பேச்சுகள் நடைபெறலாம் என்ற ஊடகங்கள் குதித்துள்ளன.
ஒருவேளை இது நடந்தால் அது பாகிஸ்தானின் மதிப்பை அதிகரிக்கும் என்ற குறுகுறுப்பு இந்தியாவுக்கு உள்ள பின்னணியில் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதான செய்திகள் வந்தன.
மோடியுடன் ட்ரம்ப் பேசிய பின்னர் சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியதான இன்னொரு செய்தி வந்தது.
இலங்கையின் நெருக்கடிகளுக்கு உதவி செய்யும் படி ஏற்கனவே இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் விஜிதஹேரத் தொலைபேசியில் பேசி சாதக விடயங்களைப் பெற்றாலும் நிலையில் நேற்று அனுரவும் தனது பங்குக்கு மோடியுடன் பேசி இந்தோ - சிறிலங்கா எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குரிய கரட் துண்டுகளை நீட்டியமை மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற நியதியை வெளிப்படுத்தியது.
மறுபுறத்தே ஈழத்தமிழ்களின் வடபுல அரசியலவாதிகளின் ஒரு தரப்பு மாறவே மாட்டோம் என்றவகையில் தமது சீத்துவக்கேடுகளை தொடரும் அவல அத்தியாயங்களும் சுயேச்சை கிளாடியேற்றர் மேற்பார்த்த சம்பவங்களாக தொடருகின்றன. தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வெளிப்பட்ட அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்கள்குளிக்கப்போய்; சேறுபூசிக்கொண்ட நகர்வுகள் நடந்தன.
இன்னொரு புறத்தே அதே எம்.பி அண்மையில் மலையக தமிழ் மக்களை இழிவுபடுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில்; வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளைப் பேசுவதை குற்றமாக்கும் அனைத்துல குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையான ICCPR விதிகளை கையில் எடுத்த மலையக குடிசார் பிரதிநிதிகள் அதன் அடிப்படையில் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவிலும் காவற்துறை தலைமையகத்திலும் முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளதான செய்திகளும் வந்த நிலையில் உள்ளுர் மற்றும் உலக விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |