திருகோணமலையை குறிவைக்கும் அமெரிக்கா...! யுத்த மூலோபாயத் தளமாக மாறும் இலங்கை
அண்மைக்காலமாக அமெரிக்க நாளேடுகள் தாய்வான் யுத்தத்தைக் குறித்து எச்சரித்து வரும் நிலையில், அந்தப் போருக்கான மிக முக்கிய மூலோபாயத் தளமாக திருகோணமலையை முன்னிலைப்படுத்துகின்றன.
இந்த வருடம் தாய்வான் யுத்தம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பசிபிக் கடற்பரப்பில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலில் ஒரு வலுவான தளம் அமெரிக்காவிற்குத் தேவையாகின்றது.
இந்தநிலையில், யுத்த சூழலில் தனது கடற்படை மற்றும் வான்படை நகர்வுகளை உறுதிப்படுத்த, உலகின் சிறந்த இயற்கை துறைமுகமான திருகோணமலையைத் தனது முழுமையான வசத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா திட்டமிடுகின்றது.
தாய்வான் போரின் போது சீனாவின் விநியோகப் பாதைகளை முடக்கவும் மற்றும் தனது போர்க்கப்பல்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாகவும் திருகோணமலையைப் பயன்படுத்துவதே அமெரிக்காவின் முக்கிய இலக்காகும்.
இதனடிப்படையில், வல்லரசுகளின் இந்த மோதல் போக்கினால், திருகோணமலைத் துறைமுகம் ஒரு சர்வதேச இராணுவ மையமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் இது ஆசியப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |